கோவையில் கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த 19வயது கல்லூரி மாணவி ஒருவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் உடன் படிக்கும் மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நெருக்கமாக உடனிருந்த கல்லூரி மாணவி மூலம் அந்த ,மாணவிக்கு சென்னை கண்ணம்மாள்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் மாணவியை திருமண ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று மாரியப்பன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியை கல்லூரி விடுதியில் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்ட மாணவி, தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு மறுத்த அவர், பாலியல் வீடியோவை மாணவியின் தந்தைக்கு அனுப்பிவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதன் தொடர்பாக கடந்த 26-ம் தேதி மதுரை எம்.சத்திரபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கார்த்திக் மீது ‘போக்சோ’ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர் கோவையில் வேறொரு வழக்கில் கைதாகி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கார்திக் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.