சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி லஞ்சம் வழங்கிய புகாரில் அதானியை கைதுசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சி சார்பில் வரும் நவம்பர் 28 தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி லஞ்சம் – ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்யவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
சென்னையில் நவம்பர் 27, 2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் கட்சி அணிகளும், அனைத்து தரப்பு பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.