Homeசெய்திகள்தமிழ்நாடுமூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு - சென்னை மெட்ரோ நிர்வாகம் ...

மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு – சென்னை மெட்ரோ நிர்வாகம் Decision to run one metro train every three minutes – Chennai Metro Administration

-

- Advertisement -
மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக, கூட்ட நெரிசல் நேரங்களில், ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில், விரைவில் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த உள்ளதாவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு வழித்தடத்தில் பயன்பாட்டில் உள்ளது. விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பொதுமக்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி அலுவலகம் என பலதரப்பட்ட பயணங்களுக்கு மெட்ரோ சேவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அதன் வெளிப்பாட்டின் காரணமாக ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனை கருத்தில் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மக்கள் வசதிக்காக, மக்கள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய நேரங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற முறையை மாற்றி மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற புதிய ரயில் இயக்க நேரத்தை செயல்படுத்தி வருகிறது.

அதோடு பீக் ஹௌர்ஸ் (Peak Hours) என சொல்லப்பட கூடிய கூட்ட நெரிசல் நேரங்களில் விரைவாகவும் ரயில்களை இயக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ நடத்திய ஆய்வில் அண்ணா சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இருப்பதால் மெட்ரோவில் பயணம் செய்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. எனவே வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு ரயில் இயக்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரை,மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வண்ணாரப்பேட்டை முதல் (அண்ணா சாலையில், ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக என) ஆலந்தூர் வரை இயங்ககூடிய ரயில்கள் ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இருந்த நிலையில் தற்போது ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்படுகிறது.
அதேபோல சென்ட்ரல் முதல் பரங்கிமலைக்கு 12 நிமிடத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்பட்டு நிலையில் தற்போது 10 நிமிடத்திற்கு ஒன்று என்ற நிலையில் இயக்கப்படுகிறது.

மக்கள் கூட்டம் குறைவான நேரத்தில் (அதாவது காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 முதல் மாலை 5 மணிவரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை) விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை ஒன்பது நிமிடத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்படும் எனவும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை ஒவ்வொரு 18 நிமிடத்திற்கும் ஒரு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில் அதன் பிறகு முழுமையாக இதனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் சென்னை மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

MUST READ