spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைCMRL அட்டைக்கு குட்பை ! NCMC க்கு மாறியது சென்னை மெட்ரோ!

CMRL அட்டைக்கு குட்பை ! NCMC க்கு மாறியது சென்னை மெட்ரோ!

-

- Advertisement -

CMRL அட்டைக்கு குட்பை ! NCMC க்கு மாறியது சென்னை மெட்ரோ!இன்று முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் CMRL பயண அட்டைகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியாது. NCMC என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாறியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!

பயணிகள் தங்களது CMRL பயண அட்டை மெட்ரோ ரயில் நிலைய கவுண்டர்களில் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக NCMC பயண அட்டையை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது!

we-r-hiring

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிக்க CMRL பயண அட்டையுடன் கூடுதலாக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை ( NCMC National Common Mobility Card – சிங்கார சென்னை அட்டை ) அறிமுகப்படுத்தியது. இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாறி உள்ளது.

அதன்படி 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டது. அதே போல QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டுகள் பெறும் முறைகள் வழக்கம் போல் தொடரும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் பழைய CMRL அட்டையை என்ன செய்வது?

பயணிகள் தங்களது ஏற்கனவே உள்ள CMRL பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் மீண்டும் ரீசார்ஜ் செய்ய முடியாது.

CMRL பயண அட்டையின் இருப்பு தொகை குறைந்தப்பட்ச தொகை 50 ரூபாய்யை எட்டும் போது இந்த CMRL பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு அதற்கு பதிலாக பயணிகள் தேசிய பொது போக்குவரத்து அட்டையை எந்தவித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பழைய CMRL பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகையை புதிய தேசிய பொது போக்குவரத்து NCMC அட்டைக்கு பயணிகள் மாற்றி கொண்டு தொடர்ந்து மெட்ரோவில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் தாயகம் திரும்பினர்

MUST READ