
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!
வாரச்சந்தையையொட்டி, நடைபெற்ற ஆட்டுச்சந்தை இன்று (நவ.08) அதிகாலை 05.00 மணிக்கு தொடங்கியது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வழக்கத்தை விடக் கூடுதலாக சந்தைக்கு ஆடுகள் கொண்டு வரப்பட்டதால், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகளும், உள்ளூர் வியாபாரிகளும் ஆடுகளைப் போட்டிப்போட்டுக் கொண்டு கூடுதல் விலைக்கு வாங்கிச் சென்றனர்.
அதிகபட்சமாக ரூபாய் 18,000 வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த வாரம் வெளிமாநில வியாபாரிகளும் அதிகளவில் வருகைத் தந்ததால், ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை- மூன்று பேர் கைது!
குறிப்பாக, இந்த ஆட்டுச்சந்தையில் சுமார் 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.