Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்டா குறுவைப் பாதிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

டெல்டா குறுவைப் பாதிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

-

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.07) ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பை நாடெங்கும் உருவாக்க ரூபாய் 3,760 கோடி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கடைமடை வரை சென்றடையாததால், குறுவைச் சாகுபடி பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறியிருந்த நிலையில், வேளாண் துறை அதிகாரிகள் நேரில் களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, நாகை மாவட்டத்தில் வேளாண்துறை அதிகாரி நடராஜன், அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆய்வு மேற்கொண்டு வரும் அதிகாரிகளுடன் இன்று (செப்.07) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

“சர்வதேச வளர்ச்சியில் ஆசியானின் பங்கு முக்கியமானது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

இதில் குறுவைப் பயிர் சாகுபடி பாதிப்பு மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண்மைத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

MUST READ