உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்ற பட்டத்துடன் இனிமேல் யாரும் அழைக்க வேண்டாம், இளைய தலைவர் என்று அழைக்க வேண்டும் திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு டிவி, மிக்ஸி தையல் மெஷின், சைக்கிள்,அரிசி உட்பட நலத்திட்டங்களை வழங்கினர்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ லியோனி பேசியபோது தற்போது, மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்று பட்டத்துடன் அழைத்து வருகிறோம், திரை உலகில் சின்னவர் என்று ஏற்கனவே ஒருவர் இருந்தார். அதனால் அறந்தாங்கியில் அவர் பெயரை இளைய தலைவர் என்று பட்டத்துடன் இனிமேல் அழைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் வைத்தார். அதன் பின்னர் இந்திய பிரதமர் மோடி மாவு இல்லாமல் வாயில் வடை சுடுபவர் என்றும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது ஒரு போதும் பிஜேபி தமிழ்நாட்டில் கால் பதிக்காது என்றும் பேசினார்.


