spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடலோர காவல் படை தலைமை இயக்குநர் மரணம்!

கடலோர காவல் படை தலைமை இயக்குநர் மரணம்!

-

- Advertisement -

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்திய கடலோர காவல்படையின் 25வது தலைமை இயக்குநராக செயல்பட்டவர் ராகேஷ் பால். இவர் சென்னையில் உள்ள அடையாறு கடற்படை தளத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். பிற்பகல் 2 மணி அளவில் ராகேஷ் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

we-r-hiring

இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இரவு 7 மணி அளவில் ராகேஷ்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவரின் உடலுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

MUST READ