spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவின் செல்வாக்கை உயர்த்தியவர் மோடி – அன்புமணி புகழாரம்

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தியவர் மோடி – அன்புமணி புகழாரம்

-

- Advertisement -

இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்புமணி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளாா்.இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தியவர் மோடி – அன்புமணி புகழாரம்பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன்பின் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் 135 நாள்கள் அந்தப் பதவியில் தொடர்வதன் மூலம், ஜவஹர்லால் நேருக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக அப்பதவியில் நீடிக்கும் இரண்டாவது தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

we-r-hiring

பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் சீமான்..

MUST READ