எஸ்.ஐ., தீயணைப்புத் துறை பணியிடங்களுக்கான இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு(TNUSRB) உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப்பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு(TNUSRB) உத்தரவிட்டுள்ளது.
இந்த பணிக்களுக்கான அறிவிப்பு கடந்த 2023 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வுகள் முடிவடைந்த பின், 2024 ஜனவரி மாதம் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீட்டு நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என கூறி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் இடஒதுக்கீட்டு நெடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் அரசுத்தரப்பில் பிழைகள் திருத்தப்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்ததால், வழக்கு முடிக்கப்பட்டது.
பின்னர் 2024 ம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், முதல் பட்டியலில் இருந்த சிலர் இதில் இடம்பெறாததால், புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, அந்த பட்டியலை ரத்து செய்து, ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாரை நியமித்து இடஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி, புதிய தேர்வுப் பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டார். மூன்று மாதங்களில் பட்டியலைத் தயாரித்து, தேர்வாணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
நீதிபதி பால்வசந்தகுமார் பின்னர் தனது அறிக்கையுடன் புதிய பட்டியலை சமர்ப்பித்தார். ஆனால், அந்தப் பட்டியல் முறையாக இல்லை என தெரிவித்து, அதை ரத்து செய்ய வேண்டும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மேல் முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர், பால்வசந்தகுமார் தயாரித்த பட்டியல் சட்டப்படி முறையாகவே உள்ளதாகவும், இடஒதுக்கீடு மற்றும் தமிழில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதனால், தேர்வாணையத்தின் மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, பால்வசந்தகுமார் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டது.
இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா…கோலாகலத்துடன் கொண்டாட்டம்…