Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை

-

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் புயல், வெள்ளம் ஆகிய பேரிடர்களை எதிர்கொள்ளுதல் மற்றும் மீட்பு ஒத்திகை 30 இடங்களில் இன்று நடைபெறுகிறது.

பேரிடர் ஒத்திகை

தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் இந்திய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தமிழக கடலோர மாவட்டங்களில் புயல் மற்றும் நகர்ப்புற வெள்ளப் பேரிடர் மீட்பு ஒத்திகை இன்று நடைபெறுகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாத புரம், திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 30 இடங்களில் புயல் மற்றும் வெள்ளப் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

சென்னையில் பட்டினப்பாக்கம், கடலோரப் பகுதியில் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையில், பேரிடர் மேலாண்மைத் துறையில் இருந்து வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், கடற்படை யினர், தரைப்படையினர், தீய ணைப்புப் படையினர், மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் ஒன்றுசேர்ந்து தேவாலயம், மீனவர் சமூகநலக் கூடம், குடி யிருப்புகள் போன்றவற்றில் நீர் சூழ்ந்த நிலையில், அங்கு தங்கி யுள்ள பொதுமக்களை மீட்டு வருதல், மின்மாற்றி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கிருந்து பொதுமக்களை மீட்டு வருதல் போன்ற ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு மீட்கப்பட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உணவு உள்ளிட்டவை வழங்கப் பட்டன.

MUST READ