spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கண்ணீர்!

தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கண்ணீர்!

-

- Advertisement -

 

விஜயகாந்த்

we-r-hiring

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (வயது 71) இன்று (டிச.28) காலை காலமானார்.

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று…. தேமுதிக நிர்வாகம் அறிவிப்பு!

சென்னையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த், சிகிச்சைப் பலனின்றிக் காலமானார். சளி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார் விஜயகாந்த். கடந்த நவம்பர் 18- ஆம் தேதி சளி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 12- ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட விஜயகாந்த், டிசம்பர் 14- ஆம் தேதி நடந்த தே.மு.தி.க. பொதுக்குழுவில் கலந்து கொண்டார்.

நேற்று முன்தினம் (டிச.26) மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அவர் காலமானார்.

‘அந்த படங்களில் நடிக்கவே மாட்டேன்’…. நடிகர் சிவகார்த்திகேயன்!

இன்று (டிச.28) காலை 03.45 மணிக்கு மாரடைப்பால் விஜயகாந்தின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது. விஜயகாந்தின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விஜயகாந்த் காலமான செய்தி அறிந்ததும் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். விஜயகாந்த் வீட்டின் முன்பும், கட்சி அலுவலகம் முன்பும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்த் வீட்டின் முன்பு தே.மு.தி.க. கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

MUST READ