- Advertisement -
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக போராட்டம் அறிவிப்பு
சுங்கச்சாவடியில் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய வரும் மத்திய அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை மாபெரும் வெற்றி போராட்டமாக மாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


