
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி டெண்டரின் போது, கலவரத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 72 உயர்வு!
கடந்த அக்டோபர் 30- ஆம் தேதி அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில், கல்குவாரிக்கான டெண்டர் ஏலம் நடைபெற்றது. அப்போது, மாற்றுக் கட்சியினர் பங்கேற்கக் கூடாது எனக் கூறி, தி.மு.க. நிர்வாகிகள் தகராறு செய்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, 10 நபர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்தனர். இந்த நிலையில், தகராறில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர் என 13 பேரை இரவோடு இரவாக காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் உடல் நலக்குறைவால் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா?”- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
மற்ற 8 பேரும் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 8 பேருக்கும் 15 நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் கிளைச் சிறையில் 8 நபர்களும் அடைக்கப்பட்டனர்.