
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 72 உயர்ந்துள்ளது.
தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!
இன்று (நவ.02) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து, 45,560 ரூபாய்க்கு விற்பனையானது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து 5,695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து, ரூபாய் 77.70- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,500 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. உலக பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை மற்றும் இஸ்ரேல்- ஹமாஸ் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் உச்சத்தைத் தொடும் என தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.