
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

‘108 ஆம்புலன்ஸ்-ல் பணியாற்ற வாய்ப்பு’- இளைஞர்களின் கவனத்திற்கு!
வரும் நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய நான்கு நாட்கள் நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப்படும் ரயில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தீபாவளி பண்டிகை – நவம்பர் 5ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்.
மறுமார்க்கத்தில், தாம்பரம்- நாகர்கோவில் இடையே நவம்பர் 6, 13, 20, 27 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தாம்பரத்தில் காலை 08.05 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 08.45 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.