Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க.- ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு இழுபறி முடிவுக்கு வருகிறது!

தி.மு.க.- ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு இழுபறி முடிவுக்கு வருகிறது!

-

 

தி.மு.க.- ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு இழுபறி முடிவுக்கு வருகிறது!

தி.மு.க.- ம.தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது.

புதுச்சேரி அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க. – ம.தி.மு.க. இடையே தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், சென்னையில் ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், தி.மு.க.விடம் ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட்டை கேட்டு பெறுவது என ம.தி.மு.க. நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை – ஒரு சவரன் 49,000ஐ நெருங்கியது!

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வைகோவின் பதவிக்காலம் முடிந்த பிறகு 2025- ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், அதன் பிறகு மீண்டும் வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளது.

MUST READ