spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10- ஆம் தேதி நேர்காணல்"- தி.மு.க. தலைமை அறிவிப்பு!

“விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10- ஆம் தேதி நேர்காணல்”- தி.மு.க. தலைமை அறிவிப்பு!

-

- Advertisement -

 

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10- ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

we-r-hiring

அயலான் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… வந்தது புதிய அப்டேட்…

இது குறித்து தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், வருகிற மார்ச் 10- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

மகளிர் தின ஸ்பெஷல்… வடக்குப்பட்டி ராமசாமி முதல் யாத்ரா 2 வரை..

வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ