Homeசெய்திகள்தமிழ்நாடு"சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்....."- மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

“சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்…..”- மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

-

 

"சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்....."- மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
Photo: CM MKStalin

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு, பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைச் செய்திருந்த நிலையில், அமைச்சரின் குடும்பத்தினர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்ற அனுமதிக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவைச் சிகிச்சை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தி எதிர்ப்பு போராட்டம், மிசா காலம் என நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை. மத்திய பா.ஜ.க. அரசு எதேச்சதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் ரெய்டு நடத்தினார்களே; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்களா? பா.ஜ.க.வின் காலடியில் கிடக்கும் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி செந்தில் பாலாஜியைப் பற்றி குறைக்கூறுகிறார். அ.தி.மு.க.வைக் கொத்தடிமைக் கூடாரமாக்க அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யைப் பயன்படுத்தியது பா.ஜ.க.

இதனிடையே, அமைச்சர் கைது குறித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று (ஜூன் 15) மதியம் 01.30 மணிக்கு வீடியோப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “அ.தி.மு.க. மாதிரி அடிமைகளை விசாரணை அமைப்புகளைக் காட்டி மிரட்டி அடிப்பணிய வைக்கிறார்கள். தி.மு.க.வினரைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்; இது எச்சரிக்கை. அ.தி.மு.க.வைப் போல் உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவர்கள் அல்ல தி.மு.க.காரர்கள். மிரட்டிப்பணிய வைக்க நினைத்தால் குனியமாட்டோம்; நிமிர்ந்து நிற்போம்; நேருக்கு நேர் சந்திப்போம்.

இந்தி எதிர்ப்பு போராட்டம், மிசா காலம் என நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை. மத்திய பா.ஜ.க. அரசு எதேச்சதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் ரெய்டு நடத்தினார்களே; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்களா? பா.ஜ.க.வின் காலடியில் கிடக்கும் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி செந்தில் பாலாஜியைப் பற்றி குறைக்கூறுகிறார். அ.தி.மு.க.வைக் கொத்தடிமைக் கூடாரமாக்க அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யைப் பயன்படுத்தியது பா.ஜ.க.

அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?

டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்கத் தடை வாங்க உச்சநீதிமன்றத்துக்கு ஓடியவர் பழனிசாமி. ஒரே ஸ்கிரிப்ட்டை பல மாநிலங்களில் டப்பிங் செய்கிறது பா.ஜ.க. அரசு. அமலாக்கத்துறையின் நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் ஆகும். பா.ஜ.க. தலைமை அமலாக்கத்துறை மூலமாக தங்கள் எண்ணங்களைச் செய்ய நினைக்கிறது. செந்தில் பாலாஜியைத் தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம்?

உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெறாது. பா.ஜ.க.வுக்கு எதிரானவர்கள் மீது மட்டும் சுமார் 3,000 ரெய்டுகளை நடத்தியுள்ளனர். பா.ஜ.க.வுக்கு மாறுவோர் மீது புலனாய்வு அமைப்புகளின் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. ரெய்டு நடத்தியவர்கள் எந்த வழக்கிலாவது தண்டனைப் பெற்று தந்தார்களா என்றால் இல்லை. ஊழலைப் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை.

பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணி

மதவாதம், சாதியவாதம் போன்றவற்றுக்கு எதிரானவர்கள் தி.மு.க.வினர். ஆட்சிக்காகக் கட்சி நடத்துபவர்களல்ல, கொள்கைக்காக கட்சி நடத்துபவர்கள் நாங்கள். தி.மு.க.விற்கு என தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ