Homeசெய்திகள்அரசியல்அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?

அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?

-

அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?
senthilbalaji

அண்ணாமலை சொல்வதைப் பார்த்தால் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின் தான் போலிருக்கிறது. எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது பாஜக என்ற விமர்சனம் இருந்து வருகிறது. இதற்காக திமுக அமைச்சர்களில் டாப் 5 லிஸ்ட் எடுத்து வைத்திருக்கிறது பாஜக. அதில் முதலிடத்தில் இருந்தவர் நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன். அவரை ஆடியோ போட்டு காலி செய்து விட்டது. பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த செந்தில் பாலாஜியை கதற வைத்து விட்டது. இனி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு . அமைச்சர் சேகர் பாபுவை தட்டி தூக்கி இந்து சமய அறநிலையத்துறையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாஜக எல்லா வேலைகளையும் செய்யும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது .

அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?
செந்தில்பாலாஜி கதறல்

இந்த பட்டியலில் அமைச்சர் சிவசங்கர் பெயர் உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் அண்ணாமலை சொல்வதை பார்த்தால் செந்தில் பாலாஜியை அடுத்த கூறி முதல்வர் ஸ்டாலின் தான் போலிருக்கிறது என்ற சலசலப்பு தமிழக அரசியலில் எழுந்திருக்கிறது.

செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீட்டில் ரெய்டு நடந்த போது அமைச்சரின் ஆதரவாளர்கள் அதிகாரிகளை அடித்து விரட்டியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில், எங்களிடம் முறையாக தகவல் சொல்லிட்டு வராததால் தான் பாதுகாப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது என்று பதில் அளித்திருந்தது காவல்துறை . இதற்காக ரெய்டு நடத்தப் போகிறவர்கள் என்றைக்கு வருவோம் எந்த நேரத்தில் வருவோம் என்றா சொல்லிவிட்டு போவார்கள். தப்பிக்க அவர்களே வழி அமைத்துவிட்டா வருவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?
அமித்ஷா அண்ணாமலை

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் நிலையில், சிபிஐக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சிறப்பு அனுமதியை தமிழக அரசு வாபஸ் பெற்றிருக்கிறது. எந்த ஒரு மாநிலத்திலும் மத்திய அரசு சிபிஐ விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும் அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியை பெற வேண்டும். இந்த டெல்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டத்தில் கடந்த 1989 -1992 ஆம் ஆண்டுகளில் சிலவகை வழக்குகளுக்கு என்று வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதி இன்றைக்கு தமிழக அரசு திரும்ப பெற்று உத்தரவிட்டிருக்கிறது. இதனால் இனி சிபிஐ அதிகாரிகள் தமிழகத்தில் விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழக அரசின் முன் அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதே போன்ற உத்தரவை ஏற்கனவே கேரளா, ராஜஸ்தான், மிசோரம் , தெலுங்கானா , பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களும் பிறப்பித்துள்ளன .

அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?
முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பின் தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. இதுகுறித்து அண்ணாமலை, திமுகவின் முந்தைய ஆட்சியின் போது மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒப்பந்தத்திற்காக 200 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார் மு .க. ஸ்டாலின் என்று தமிழக பாஜக ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தது. இன்றைக்கு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது என்று ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றால், சிபிஐ விரைவில் தன் வீட்டிற்கு விசாரணைக்கு வரும் என்கிற அச்சத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் இப்படி செய்து இருக்கிறார். சிபிஐ தன் வீட்டிற்கு விசாரணைக்கு வரும் என்ற அச்சத்தில் இருக்கிறார் முதல்வர் என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

அண்ணாமலை சொல்வது போல் முதல்வர் ஸ்டாலினுக்கு நிச்சயம் குறி இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆனால், அது அடுத்த குறியா? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

MUST READ