spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு

திமுக – காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு

-

- Advertisement -

திமுக காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

மத்திய பாஜக அரசில் பிரதமர் மோடியின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளுங்கட்சியான திமுக தங்களது தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வருகிறது. தற்போது கூட்டணிகளில் உள்ள மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட 6 கட்சிகளுக்கும் 9 தொகுதிகள் பங்கீட்டு முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒதுக்கீடு குறித்து இன்று மாலை கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்காக டெல்லியிலிருந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், முகுல் வாஸ்னிக், அஜய்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தருகிறார்கள். கடந்த முறை திமுகவானது காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இந்தமுறை எத்தனை தொகுதிகள் ஒதுக்குகிறார்கள்  என்பது குறித்து இன்று மாலை தெரியவரும்.

MUST READ