
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ என்ற ‘பாதயாத்திரை’யைத் தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காங்கிரஸ், தி,மு.க. என்றால் நிலக்கரி, 2ஜி ஊழல்கள் தான் நினைவுக்கு வரும். பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஊழல்கள், குடும்ப ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பயங்கரவாதத்தை ஒடுக்க சர்ஜிக்கல், விமானப்படைத் தாக்குதல்களை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.
புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..
மீனவர்களின் பிரச்சனைக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு தான் காரணம். காங்கிரஸ் கூட்டணி தான் இலங்கையில் தமிழர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. காங்கிரஸ் கூட்டணி நாட்டை வலுப்படுத்த நினைக்கவில்லை, தங்கள் வாரிசுகளை முன்னேற்ற நினைக்கின்றனர். நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக தி.மு.க. உள்ளது; அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் கைதாகி உள்ளார். கைதாகி சிறையில் உள்ள நிலையிலும் அவர் அமைச்சராக இருப்பது ஏன்?
செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றால் எல்லா ரகசியமும் வெளியே வந்துவிடும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ட்விட் பதிவிட்டால் ஆட்சிக்கு ஆட்டம் ஏற்படும். மின் பகிர்மான கழகத்தில் தி.மு.க. ஊழல் செய்துள்ளது; தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது?
“விவசாயிகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
ஒவ்வொரு துறையிலும் தி.மு.க. ஊழல் செய்து வருகிறது. இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் தவிர, பிற ரயில் திட்டங்களுக்காக 34,000 கோடி ரூபாய் மத்திய அரசு தந்திருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி நாட்டை வலுப்படுத்த நினைக்கவில்லை, தங்கள் வாரிசுகளை முன்னேற்ற நினைக்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.