spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தி.மு.க. சொல்வது பச்சைப்பொய்"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“தி.மு.க. சொல்வது பச்சைப்பொய்”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"தி.மு.க. சொல்வது பச்சைப்பொய்"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

we-r-hiring

90% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க. கூறுவது பச்சைப்பொய் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

விக்ரம் பிறந்தநாளில் ‘தங்கலான்’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!

சேலம் மாவட்டம், நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “90% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க. கூறுவது பச்சைப்பொய். பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

மரங்களின் நாயகன் பத்மஸ்ரீ விவேக் நினைவு தினம் இன்று!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என தி.மு.க. கூறியது; ஆனால் செய்யவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக உள்ளது. அதனை தி.மு.க. எதிர்க்கவில்லை. மக்கள் நலனுக்காக முதல்முறை வாக்காளர்கள், பெண்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்” என்று தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

MUST READ