Homeசெய்திகள்தமிழ்நாடுகாலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை 40% உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்

காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை 40% உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்

-

காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை 40% உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்

அரசின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பொறுத்தவரை 16 பள்ளிகளில் 1036 பள்ளி மாணவர்கள் இதனால் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தில் மாணவர்களுடன் நானும் ஒரு பயனாளி. இந்தியாவிற்கே முதன்மையாக 31 ஆயிரம் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பா.ஜ.க அரசால் மணிப்பூர் பற்றி எரிந்தது. அதைப்பற்றி எல்லாம் பா.ஜ.க அரசு கவலைப்படாமல் தி.மு.க அரசை மட்டுமே குறைபேசி வருகின்றனர். பா.ஜ.க ஆட்சி அதானி, ஆட்சியாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதை தான் ராகுல் காந்தி கூறுகிறார், அதனால் ராகுல் பதவியை பறித்தனர்.

Image

நீட் தேர்வால் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதீசன் வரை 31 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்திட முழு முயற்சி எடுத்தோம், ஆளுநர் ஒத்துழைக்காமல் மசோதாவை திரும்ப அனுப்புகிறார். நீட் தேர்வை ஒழித்திட அனைத்து இளைஞர்களும் உதயநிதியாக போராட வேண்டும். அ.தி.மு.க விற்கு பின்னால் பா.ஜ.க என்கிற விஷப்பாம்பு ஒழிந்து கொண்டுருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் விஷப்பாம்பை ஒழிக்க வேண்டும்” என்றார்

MUST READ