spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!

தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!

-

- Advertisement -

 

தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!

we-r-hiring

விக்கிரவாண்டி தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி (வயது 71) இன்று (ஏப்ரல் 06) காலமானார்.

விசாரணை கைதி உயிரிழப்பு- குடும்பத்தினர் போராட்டம்!

விழுப்புரத்தில் நேற்று (ஏப்ரல் 05) நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி, திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், ரத்த வாந்தியும் எடுத்துள்ளார்.

இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. புகழேந்திக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 06) காலை 10.30 மணிக்கு காலமானார்.

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.53.000-த்தை நெருங்கியது!

தி.மு.க.வின் அனுபவம் மிக்க நிர்வாகி புகழேந்தி!

காலஞ்சென்ற சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி தி.மு.க.வின் அனுபவம் மிக்க மூத்த நிர்வாகி ஆவார். கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவராக இருந்த புகழேந்தி, கடந்த 2019- ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு முதல் முறையாக சென்றார்.

MUST READ