Homeசெய்திகள்தமிழ்நாடுயார் அமைச்சர் என்பதை முதல்வர் மட்டுமே முடிவெடிக்க முடியும்: கனிமொழி

யார் அமைச்சர் என்பதை முதல்வர் மட்டுமே முடிவெடிக்க முடியும்: கனிமொழி

-

யார் அமைச்சர் என்பதை முதல்வர் மட்டுமே முடிவெடிக்க முடியும்: கனிமொழி

அரசமைப்புச் சட்டத்தை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மதிக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

rn ravi mkstalin

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மே 31- ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். மறுநாளே இந்த கடிதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. இதனிடையே தற்போது, செந்தில் பாலாஜியிடம் உள்ள துறைகளை மாற்றி அமைக்கக்கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் கடிதத்தை ஏற்காமல் திருப்பி அனுப்பி இருக்கிறார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ