spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிசாரணை நடத்திய பின் நடவடிக்கை- உதயநிதி ஸ்டாலின்

விசாரணை நடத்திய பின் நடவடிக்கை- உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

விசாரணை நடத்திய பின் நடவடிக்கை- உதயநிதி ஸ்டாலின்

சென்னை அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Image

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இது எப்பவுமே அண்ணா சதுக்கம்தான்.. பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது! டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனதற்கு காரணமானவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட் தொடர்பாக விசாரணைக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் கூறினார்.

we-r-hiring

Image

தொடர்ந்து மகளிர் காவலர்களுக்கான பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். காவல்துறையில் மகளிர் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி பாய்மர படகு பயணம் நடைபெறுகிறது. மகளிர் காவலர் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளதாகவும், மகளிர் காவலர்களுக்கு திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

MUST READ