spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவட மற்றும் மத்திய சென்னையை கைப்பற்றிய திமுக

வட மற்றும் மத்திய சென்னையை கைப்பற்றிய திமுக

-

- Advertisement -

வட மற்றும் மத்திய சென்னையை கைப்பற்றிய திமுக

சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

we-r-hiring

வட மற்றும் மத்திய சென்னையை கைப்பற்றிய திமுக

வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை வாக்கு இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

வட சென்னை தொகுதி :

வட சென்னை தொகுதியில் மொத்தம் 14,96,224 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 8,99,367 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால்கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் வினோதினி ஆகியோர் போட்டியிட்டனர். அதில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றார்.

வட மற்றும் மத்திய சென்னையை கைப்பற்றிய திமுக

இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை விவரம்

திமுக           –     4,96,485    

அதிமுக        –     1,57,761    

பாஜக           –     1,13,085

நாதக           –     95,783

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 3,38,724 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மத்திய சென்னை தொகுதி :

மத்திய சென்னை தொகுதியில் மொத்தம் 13,50,161 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 7,30,602 பேர் வாக்களித்திருந்தனர். இதில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் என நான்கு முனை போட்டி நிலவியது. அதில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றுள்ளார்.

வட மற்றும் மத்திய சென்னையை கைப்பற்றிய திமுக

இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை விவரம்

திமுக           –     4,13,485    

பாஜக           –     1,69,121

தேமுதிக        –     71,951

நாதக           –     46,013

திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2,44,364 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

MUST READ