spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாலை விபத்தில் உயிரிழந்த நாய்- இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த போலீசார்

சாலை விபத்தில் உயிரிழந்த நாய்- இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த போலீசார்

-

- Advertisement -

சாலை விபத்தில் உயிரிழந்த நாய்- இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த போலீசார்

விபத்தில் சிக்கி உயிரிழந்த நாய்க்கு இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த திருப்பூர் போலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

thiruppur

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே புது மார்க்கெட் வீதி மங்கலம் சாலை பூங்கா சாலை பெருமாள் கோவில் வீதி என நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்த பகுதி மாநகராட்சியின் முக்கிய பகுதி என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால் போக்குவரத்தை கண்காணிக்க புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் பணியாற்றி வந்தனர். இந்த பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி நாய் ஒன்று, புறக்காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது. அதற்கு பிறகு நாய்க்கு அன்பு காட்டிய போலீசார் தினந்தோறும் உணவு வழங்கி வந்தனர்.

we-r-hiring

தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே வளர்ந்த அந்த நாய், காவலர்கள் வந்தால், வாலை ஆட்டிக்கொண்டு அவர்களுடனேயே சுற்றி திரியும். இந்நிலையில் நேற்று அந்தப் பகுதியில் சென்ற வாகனம் ஒன்று நாய் மீது மோதியதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இதனையறிந்த போலீசார் வேதனை அடைந்தனர். தொடர்ந்து தங்களுடன் நான்கு ஆண்டுகளாக பயணித்த நாய் இல்லாததால் சோகமடைந்த போலீசார, நாய்க்கு இறுதி மரியாதை செய்ய தீர்மானித்தனர். அதன்படி புற காவல் நிலையம் அருகிலேயே குழி தோண்டி நாய் உடலுக்கு இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

MUST READ