Homeசெய்திகள்தமிழ்நாடுசேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) காலை 11.00 மணிக்கு சேலம் மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் ரூபாய் 95.63 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்பட்டமுத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாநகரப் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையம் இரண்டு அடுக்குகளைக் கொண்டது.

“தமிழர் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு தி.மு.க.வே காரணம்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

அதேபோல், மறுசீரமைக்கப்பட்ட நேரு கலையரங்கம், பெரியார் பேரங்காடி, வ.உ.சி. மார்க்கெட், போஸ் மைதானத்தில் உள்ள வணிக வளாகம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

Photo: TN Govt

கருணாநிதியின் வெண்கலச் சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சேலம் மாநகராட்சி மேயர் ஆர்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவுதம் சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், துணை மேயர் சாரதா தேவி மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ