
சேலம் மாநகரில் உள்ள பேரறிஞர் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கலத் திருவுருவச் சிலையை இன்று (ஜூன் 11) காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணா பூங்கா வளாகத்தில் 1,713 சதுரடி பரப்பளவில் 16 அடி உயரம் கொண்டதாக சிலை அமைக்கப்பட்டுள்ளது.

“தமிழர் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு தி.மு.க.வே காரணம்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சேலம் மாநகராட்சி மேயர் ஆர்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவுதம் சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், துணை மேயர் சாரதா தேவி மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.