Homeசெய்திகள்தமிழ்நாடுபேருந்து ஓட்டுநர், நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய மாணவர்!

பேருந்து ஓட்டுநர், நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய மாணவர்!

-

- Advertisement -

 

பேருந்து ஓட்டுநர், நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய மாணவர்!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு செல்லும் பேருந்து ஓட்டுநர் ஹரிஹரசுப்பிரமணி (வயது 57), நடத்துனர் மணி (வயது 52). இவர்கள் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை இயக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது பேருந்திற்குள் தனியார் சட்டக்கல்லூரி மாணவன் கிஷோர் குமார் மற்றும் அவருடன் ஒரு பெண்ணும் காலியாக இருந்த பேருந்தில் அமர்ந்து உள்ளனர். இதனைக் கண்ட ஓட்டுநர் பேருந்து எடுக்க போகிறோம்; நீங்கள் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். அப்போது அந்த மாணவன் நீங்கள் யார் என்னை கீழே இறங்க சொல்ல என கேட்க, ஓட்டுநருக்கும், மாணவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

லவ்வர் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

இந்நிலையில் மாணவன் கிஷோர்குமார் ஓட்டுநர், நடத்துநர் இருவரையும் உடனிருந்த பெண்ணின் முன்பு தான் ஹீரோ என நிரூபிக்க ஓட்டுநர் கண் புருவத்திலும், நடத்துநர் கழுத்தின் பகுதியிலும் தான் வைத்திருந்த இருசக்கர வாகன சாவியால் குத்தி தாறுமாறாகத் தாக்கியுள்ளார்.

ஓட்டுநர், நடத்துநர் இருவருக்கும் ரத்தம் பீறிட்டு வலியில் கதறவே பணிமனையில் அக்கம் பக்கத்தில் இருந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அந்த மாணவனைப் பிடித்து வைத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100- க்கு தகவல் அளித்துள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஆவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே தகவல் அறிந்து வந்த ஆவடி காவல் நிலைய ரோந்து பணி காவலர்கள் அந்த மாணவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செந்தூர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் எல்.கே.ஜி.2, மூக்குத்தி அம்மன் 2 திரைக்கு வரும் – ஆர்.ஜே.பாலாஜி

இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ஓட்டுநர், நடத்துநரை அங்கிருந்தவர்களால் அருகில் உள்ள ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.

MUST READ