spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தி.மு.க. அரசைக் களங்கப்படுத்த முயற்சி"- அமைச்சர் ரகுபதி பேட்டி!

“தி.மு.க. அரசைக் களங்கப்படுத்த முயற்சி”- அமைச்சர் ரகுபதி பேட்டி!

-

- Advertisement -

 

"தி.மு.க. அரசைக் களங்கப்படுத்த முயற்சி"- அமைச்சர் ரகுபதி பேட்டி!

we-r-hiring

தி.மு.க. அரசைக் களங்கப்படுத்த பா.ஜ.க. முயன்று வருவதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

அம்பத்தூரில் 200 கிராம் மெத்தம்பெட்டமைன் போலீசார் பறிமுதல் – இருவர் கைது!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தி.மு.க.வுக்கு வரும் அனைவரையும் சோதித்து பார்ப்பது என்பது இயலாதது; தி.மு.க.வினர் தவறு செய்வது தெரிய வந்தால் உடனடியாக கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கிறது. தி.மு.க. அரசைக் களங்கப்படுத்த பா.ஜ.க. முயன்று வருகிறது. தி.மு.க.வுக்கும் ஜாபர்சாதிக்கிற்கும் தொடர்பில்லை; தேர்தலின் போது பின்னடைவு ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது.

ஆசிரியப் பெருமக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுக அரசுக்கு கண்டனம் – ஈபிஎஸ்

தி.மு.க. என்றும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடாது; துணைப்போவோரை கட்சியில் வைத்திருக்க மாட்டோம். போதைப்பொருள் விவகாரத்தில் பா.ஜ.க.வின் செயல்களுக்கு அ.தி.மு.க. துணைப்போகிறது. குஜராத் துறைமுகங்கள் வழியாகத் தான் இந்தியாவிற்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. தேசிய அளவில் பல்வேறு போதைப் பொருட்கள் வழக்கில் பா.ஜ.க.வினர் கைதாகி உள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ