spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை!

நாளை அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை!

-

- Advertisement -

 

we-r-hiring

சென்னையில் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு நாளை (ஜன.06) அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

‘பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரியே இல்லை’…. விமர்சனம் செய்த இளையராஜா!

இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற ஜனவரி 06- ஆம் தேதி அன்று அதிகாலை 04.00 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் சேவைகள், ஜனவரி 06- ஆம் தேதி அன்று அதிகாலை 03.00 மணி முதல் காலை 05.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி ஜனவரி 06- ஆம் தேதி அன்று மட்டும் மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த QR குறியீடைப் பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம்.

சூரி நடிப்பில் உருவாகும் ‘கருடன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

வழக்கமான மெட்ரோ ரயில் சேவைகள் காலை 05.00 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ