Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…

அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…

-

- Advertisement -

அரசுப்பேருந்து  சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.அரசுப்பேருந்து  சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி, “ஈரோட்டில் இருந்து நேற்று காலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து உத்தமசோழபுரம் அருகே, எதிரே வந்த சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தக் கோர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும்,  காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணத் தொகைகளை தமிழ்நாடு அரசு வழங்குவதோடு, காயமடைந்தோருக்கு தரமான இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

we-r-hiring

MUST READ