Homeசெய்திகள்தமிழ்நாடு"நாட்டை காக்க 'இந்தியா' கூட்டணிக்கு ஆதரவளித்திடுக்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

“நாட்டை காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவளித்திடுக்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

-

 

"நாட்டை காக்க 'இந்தியா' கூட்டணிக்கு ஆதரவளித்திடுக்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

நாட்டைக் காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜயின் ‘விசில் போடு’ பாடல் குறித்து பேசிய மதன் கார்க்கி!

தி.மு.க. ஆட்சியின் திட்டங்களையும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களையும் பட்டியலிட்டு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வையும், தமிழ்நாட்டை பாழ்படுத்திய அ.தி.மு.க.வையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும். தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை நாசமாக்கிய பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்; இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமோ, வேண்டாமா என்பதை முடிவுச் செய்யும் தேர்தல் இது.

நடிப்பின் சிற்பி சியான் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்!

மதம், சாதி கடந்த மக்கள் ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம்; நாடு காக்க, நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ