தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மக்கள் நலனையும் மாநில முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி அந்தக் கட்சி செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.
தமிழ்நாடு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிக முக்கியமானது என்றும், அது மாநிலத்தின் அரசியல் திசையை நிர்ணயிக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த தேர்தலில் மக்கள் அளித்துள்ள முடிவை முழுமையாக மதிக்கிறோம் என கூறிய அவர், அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் குறித்து கருத்து தெரிவித்த செல்வப்பெருந்தகை, மக்கள் நலனையும் மாநில முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி அந்தக் கட்சி செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார். புதிய அரசியல் மாற்றங்கள் உருவாகும் இந்த சூழலில், ஆட்சியில் இருப்பவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்காக உழைத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி
