Homeசெய்திகள்தமிழ்நாடுஅவதூறு வழக்கிற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!

அவதூறு வழக்கிற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!

-

- Advertisement -

 

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு குறித்து பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்காரு அடிகளார் மறைவு- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

அ.தி.மு.க. கட்சி போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதில், தனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், கருத்துகளைத் தெரிவித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி மீது கே.சி.பழனிசாமி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது.

பங்காரு அடிகளார் மறைவு: “இரண்டு நாட்களுக்கு பா.ஜ.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து”- அண்ணாமலை அறிவிப்பு!

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, மேல்முறையீடு செய்த நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமியை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 08- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

MUST READ