spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு - ஈபிஎஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு – ஈபிஎஸ் கண்டனம்

-

- Advertisement -

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாலருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் சுமையாகவும், விலைவாசி உயர்வுக்கும் வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறேன்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கழகக் கூட்டணி வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மக்களவையில் குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ