Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு

கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு

-

- Advertisement -

கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு

விழுப்புரத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை அதிகரிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

tasmac

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய வேட்டை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சாராயம், கஞ்சா விற்பனை செய்து வரும் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனை காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், விழுப்புரத்தில் டாஸ்மாக் வருவாய் ரூ.4.30 கோடி வரை உயர்ந்துள்ளது. இதேபோல் கடலூர், திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாகையிலும் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது. விழுப்புரத்தில் உள்ள 222 டாஸ்மாக் கடைகளில் நாளொன்றுக்கு ரூ.3.70 கோடி வரை வழக்கமான வர்த்தகம் நடைபெறும். தற்போது அந்த வருவாய் ரூ.4.30 கோடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

MUST READ