Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னைக்கு வந்த 3 விமானங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னைக்கு வந்த 3 விமானங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

-

- Advertisement -

இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 3 விமானங்களில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் முலம் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று ஒரு மர்ம இமெயில் ஓன்று வந்துள்ளது. அதில் இலங்கையில் இருந்து வரும் ஏர்இந்தியா விமானம், சிலிகுரியில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்களில், வெடிகுண்டு உள்ளதாகவும், அவை வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்ற மர்ம இமெயில்கள், சம்பந்தப்பட்ட 3 விமான நிறுவனங்களுக்கும் சென்றுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, 3 விமானங்களும் சென்னைக்கு வந்து, வானில் பறந்து கொண்டிருந்த நிலையில், இலங்கையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஒடுபாதை அருகே தயாராக நின்றிருந்த வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் விமானத்துக்குள் ஏறி பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை.

இதேபோல் மற்ற இரண்டு விமானங்களும், உள்நாட்டு விமான நிலையத்தில்  தரையிறங்கியது அவற்றில் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர். அவற்றிலும் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

MUST READ