Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பூர்: மருந்தகத்தில் சிகிச்சை.. 3வது முறையாக சிக்கிய போலி மருத்துவர்..

திருப்பூர்: மருந்தகத்தில் சிகிச்சை.. 3வது முறையாக சிக்கிய போலி மருத்துவர்..

-

- Advertisement -
திருப்பூர்: மருந்தகத்தில் சிகிச்சை.. 3வது முறையாக சிக்கிய போலி மருத்துவர்..
திருப்பூரில் மருந்தகத்திற்குள்ளேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம் பகுதியில் ஜோடி அகஸ்டின் என்பவர் மருந்தகம் (Medical Shop)நடத்தி வருகிறார். இந்த மருந்தகத்தில் வைத்தே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் திருப்பூர் இணை இயக்குநர் மீரா தலைமையிலான குழுவினர் இன்று, ஜோடி அகஸ்டினின் மருந்து கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் ஜோடி அகஸ்டின் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்டவற்றிற்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் பாட்டில்கள் செலுத்துவது உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்து வந்தது தெரியவந்தது.

திருப்பூர்: மருந்தகத்தில் சிகிச்சை.. 3வது முறையாக சிக்கிய போலி மருத்துவர்..

அத்துடன் மருந்து கடைக்கு உள்ளேயே இரண்டு படுக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வைத்தே அவர் அங்குள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்துள்ளார். தொடர்ந்து ஜோடி அகஸ்டினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மருத்துவம் சார்ந்த எந்த படிப்பையுமே படிக்கவில்லை என்பது தெரியவந்தது. அவர் மருந்தகம் நடத்துவதற்காக ஃபார்மா படிப்பை கூட படிக்கவில்லை என்பதும், கேரளாவில் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்கிற அதிர்ச்சித் தகவலும் கிடைக்கப்பெற்றது. இவர் கடந்த 18 ஆண்டுகளாக தமிழகத்தில் மருந்தகம் நடத்தி வந்ததோடு, பொதுமக்களுக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

மேலும், ஏற்கனவே ஜோடி அகஸ்டின் கடந்த 2017ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டுகளில் போலியாக மருத்துவம் பார்த்ததற்காக போலீஸாரால் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து மருந்தகம் நடத்தி வந்தததோடு மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்து வந்ததால் மீண்டும் போலி மருத்துவர் ஜோடி அகஸ்டின் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் மருத்துவ இணை இயக்குனரக அதிகாரிகள் அவரது மருந்து கடைக்கும் சீல் வைத்தனர். முருகம்பாளையம் பகுதியில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ