Homeசெய்திகள்தமிழ்நாடுபிரபல நகைக்கடையில் 40 கிராம் நகைகளைத் திருடிச் சென்ற 2 பெண்கள்!

பிரபல நகைக்கடையில் 40 கிராம் நகைகளைத் திருடிச் சென்ற 2 பெண்கள்!

-

- Advertisement -

 

பிரபல நகைக்கடையில் 40 கிராம் நகைகளைத் திருடிச் சென்ற 2 பெண்கள்!

வேலூரில் உள்ள பிரபல நகைக்கடையில் 40 கிராம் தங்க நகைகளைத் திருடிய பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!

வேலூர் மாவட்டம், கோட்டப்பாளையம் பகுதியில் பிரபல தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த ஜனவரி 21- ஆம் தேதி வாடிக்கையாளர்கள் போல் வந்த இரண்டு பெண்கள் 40 கிராம் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் கடையின் மேலாளர் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

அந்த சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விழுப்புரத்தைச் சேர்ந்த புஷ்பா மற்றும் பானுமதி என்பது தெரிய வந்தது. திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் தேடி வந்த காவல்துறையினர், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிராம் தங்க நகைகளையும் காவல்துறையினர், பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த நகைகளைச் சரிப்பார்த்து, நகைக்கடையில் மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!

பின்னர், அந்த பெண்களிடம் விசாரணை நடத்தி காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ