Homeசெய்திகள்தமிழ்நாடு"பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு....கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

“பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு….கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம்”- சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

-

 

"பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு....கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

பச்சைத் துண்டு அணிந்துக் கொண்டு சட்டப்பேரவைக்கு வந்த தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு 2024- 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

தொடர் சரிவில் தங்கம் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

அப்போது சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “சிறுதானியங்கள், பயறு, கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியை பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும். முதல் 3 விவசாயிகளுக்கு பரிசளிக்க ரூபாய் 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கப்படும்.

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ரூபாய் 2 கோடியில் சூரியத்தோட்டம் அமைக்கப்படும். ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை பெருமைப்படுத்த முல்லை, மருத நிலப் பூங்காக்கள் அமைக்கப்படும். வாழை பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக ரூபாய் 12.73 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பேரீச்சை பரப்பு விரிவாக்கம் செய்ய ரூபாய் 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“எங்கே போகிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்?”- மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் வழங்க ரூபாய் 170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும். தூத்துக்குடி, கரூரில் 250 ஏக்கரில் பேரீச்சை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூபாய் 12,000 மானியம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ