
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ளவிருக்கிறார்.
தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…
வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, தூத்துக்குடி துறைமுகம், தூத்துக்குடி கடல் பகுதி, ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையில் கடல் பகுதிகளில் கடலோர காவல்படை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…
இதனிடையே, இந்தியாவில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.