Homeசெய்திகள்தமிழ்நாடுபெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு

-

- Advertisement -

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் காக்களூரில் அமைந்துள்ளது ஜெயின் பெயிண்ட் தொழிற்சாலை. இன்று காலை வழக்கம் போல இயங்கி வந்த தொழிற்சாலையில் ஆறு பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் மதியம் 2:30 மணி அளவில் திடீரென்று பெயிண்ட் தொழிற்சாலையில் மின்கசிவு ஏற்பட்டதால் தொழிற்சாலையில் உள்ள பெயிண்ட் பாயிலர்கள் வெடித்து சிதறி முழுவதாக எறிய தொடங்கியது.

தொடர்ந்து பெயிண்ட் பாயிலர்கள் வெடித்து சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

மேலும் தீ விபத்து ஏற்பட்ட பெயிண்ட் தொழிற்சாலையில் சிலர் சிக்கி உள்ளதாகவும் அவர்களின் நிலை தெரியாமல் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீவிரமாக போராடி வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல் அப்பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் நெருக்கமாக இருப்பதால் பக்கத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்காகவும் தீயணைப்பு துறை வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

MUST READ