spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக ரேஷன் கடைகளுக்கு உணவுதுறை அமைச்சர் உத்தரவு

தமிழக ரேஷன் கடைகளுக்கு உணவுதுறை அமைச்சர் உத்தரவு

-

- Advertisement -

தமிழக மக்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வாங்கி செலவை சமாளிக்க பெரிதும் உதவியாக இருப்பது ரேஷன் பொருட்கள் ஆகும். தமிழக அரசும் தரமான மற்றும் தடையற்ற சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமீபத்தில் உணவு மற்றும் உணவு  பொருள் வழங்கல் ,விலை கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் ,உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி, உணவுதுறை  செயலாளர் ஜெகநாதன் ,ஐஏஎஸ்தலைமையில் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அக்கூட்டத்தில் முதலில் விற்பனையாளர்கள் கிடங்கில் இருந்து தரமான பொருட்களை வாங்குவதை உறுதி செய்துக் கொள்ள வெண்டும்.தரமற்ற பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யகூடாது.

we-r-hiring

குடும்ப அட்டைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை வழங்கிட வேண்டும்.பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமல் மாத இறுதி வரை பொருட்களை தேக்கி வைக்க கூடாது.

மேலும் அவ்வாறு  நீண்ட நாட்களுக்கு தேக்கிவைக்கப்பட்ட பொருட்களை  பொதுமக்களுக்கு விற்பனை செய்யக் கூடாது.3 மாதத்திற்கு மேல் துவரம் பருப்பு உள்ள ரேஷன் கடைகளின்  பட்டியல் MIS PORTAL –லில் இருந்து எடுக்கப்பட்டு விடும்.ஆகவே ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் தரமற்றதாக இருந்தால் அவற்றை குடோனில் கொடுத்து நடப்பு மாதமே மாற்றி கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

ரேஷன் விற்பனையாளர்கள் பொதுமக்களிடம் அன்பாகவும் கனிவுடனும் பேசி பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும்.சமூக வலைதளங்களில் எவ்வித புகார்களும் வராதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்.

ரேஷன் கடைகளில் விற்பனையாகாத பொருட்களின் விவரங்களை மாதாந்திர விற்பனைக் கூட்டத்தில் பெற வேண்டியது அவசியம்.

வட்ட வழங்கல் அலுவலரிடம் கோதுமை,துவரம் பருப்பு,பாமாயில்,பச்சரிசி,போன்றவை கூடுதலாக தேவைப்பட்டால் அவரிடம் தெரிவித்து உரிய ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.இதற்கான பணிகளை அனைத்து பொது விநியோக திட்ட அலுவலகர்களும் மேற்கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.

 

MUST READ