Homeசெய்திகள்தமிழ்நாடுஇரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கொடூரமாக வெட்டி கொலை:பல்லடம் அருகே பரபரப்பு !!!!

இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கொடூரமாக வெட்டி கொலை:பல்லடம் அருகே பரபரப்பு !!!!

-

பல்லடம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்.விவசாயியான இவர் தவிடு,புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழில் புரிந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் செந்தில் குமாரிடம்  சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்.அப்போது செந்தில் குமாரின் உறவினரான மோகன்ராஜ் என்பவருக்கும் வெங்கடேசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் வெங்கடேசன் மோகன்ராஜிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் சரியாக வேலைக்கு வராததால் செந்தில்குமார் வெங்கடேசனை வேலையை விட்டு நிறுத்தி உள்ளார்.

இன்னிலையில் இன்று செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள அவரது தோட்டத்தில் அமர்ந்து வெங்கடேசன் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் மது அருந்தி உள்ளார்.எதற்காக எங்களது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்துகிறீர்கள்?என செந்தில் குமார் கேட்டுள்ளார்.அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.அங்கிருந்து கிளம்பி சென்ற வெங்கடேசன் மீண்டும் மோகன்ராஜின் வீட்டிற்கு வந்துள்ளார்.வீட்டில் இருந்த மோகன்ராஜை வெளியே அழைத்து வெங்கடேசன் பேசி கொண்டிருந்த போது உடன் இருந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளை மோகன்ராஜை சரமாரியமாக வெட்டியுள்ளனர்.அவரது அலறல் சத்தம் கேட்ட அவரது மகன் பிரணவ் (11) வெளியே வந்து பார்த்து விட்டு உடனடியாக அவனது பாட்டி புஷ்பவதி மற்றும் சித்தப்பா செந்தில்குமார் ஆகியோரை அழைத்துள்ளான்.அங்கு வந்த அவர்கள் மோகன்ராஜை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொடூரமாக வெட்டியுள்ளனர்.அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மோகன்ராஜின் சின்னம்மா புஷ்பவதியையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கொடூரமாக வெட்டி கொலை:பல்லடம் அருகே பரபரப்பு !!!!

அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த செந்தில்குமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இது குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் டி.எஸ்.பி செளமியா தலைமையிலான பல்லடம் போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மோகன்ராஜிடம் வெங்கடேசன் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும்,செந்தில்குமாரிடம் இருந்து வேலையை விட்டு நின்ற நிலையில் பல முறை மோகன்ராஜ் பணம் கேட்டு தொலை பேசியில் அழைத்து கேட்டதாகவும் தெரிய வந்தது.இதனை தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்த மோகன்ராஜை கொலை செய்ய திட்டமிட்ட வெங்கடேசன் தனது நண்பர்களை அங்கு அழைத்து வந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்,மற்றும் தடவியல் ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.மேலும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன்,கோவை மேற்கு மண்டல தலைவர் பவானீஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த கோவை மேற்கு மண்டல தலைவர் பவானீஸ்வரி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.வெட்டி கொலை செய்யப்பட்ட மோகன் ராஜ் பா.ஜ.க வில் பல்லடம் சட்டமன்ற தொகுதி மாதப்பூர் பா.ஜ.க கிளை தலைவராக உள்ளது குறிப்பிட தக்கது.நான்கு பேரின்  உடலும் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ