Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நான்கு கட்ட போராட்டம் -விக்கிரமராஜா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நான்கு கட்ட போராட்டம் -விக்கிரமராஜா

-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நான்கு கட்ட போராட்டம் அறிவிப்பு.

மாநில அரசு உடனடியாக டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சென்னை மற்றும் காஞ்சி மண்டல அவசர ஆலோசனைக் கூட்டமானது சென்னையில் நடைபெற்றது.

இதையடுத்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஜி.எஸ்.டி. தொடர்பான பல்வேறு குளறுபடிச் சட்டங்கள், தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன என்றார்.

வணிகர்களுக்கு புரியும்படி எளிமையான முறையில் சட்ட விதிகள் மாற்றப்பட வேண்டும் என அவர் கேட்டுக கொண்டார்.

அதேபோல, மாநில அரசு டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை உடனடியாக கைவிட வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தினார்..

உணவு பாதுகாப்பு சட்டத்தினால் பல்வேறு வணிகர்கள் உணவு வியாபாரத்தை விட்டே வெளியேறும் அவலம் தொடர்ந்து கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், வருகின்ற 10-ஆம் தேதி வியாபாரிகளுக்கும் பொதுமக்களும் வணிகவரித்துறை அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், முதற்கட்டமாக கருப்புப் பேட்ஜ் அணிந்து கொண்டு வணிகர்கள் கடையின் முன்பு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை வைக்க இருப்பதாக கூறினார்.

அதைத் தொடர்ந்து வரும் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக கூறிய அவர்,

அதன் பின்னரும் அதே நிலை தொடர்ந்தால், ஆர்ப்பாட்டம் நடைபெறும் தினத்திலே உண்ணாவிரதப் போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா அறிவித்தார்.

டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை மாநில அரசு நினைத்தால் அமல்படுத்தவும் முடியும் அகற்றவும் முடியும் என குறிப்பிட்டார்.

எனவே, தமிழக முதல்வர் இதில் தலையிட்டு டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை உடனடியாக  நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அரசு அதிகாரிகள் வியாபாரிகளின் நிலையை புரிந்து கொள்ளாமல் வாட்டி வதைக்கும் காரணமாகவே நான்கு கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தநங்களது பேரமைப்பின் கொடியை சிலர் தவறாக பயன்டுத்துவதை தவிர்க்க, புதிய வடிவில் பதிவு செய்துள்ளதாகவும் விக்கிரமராஜா கூறினார்.

MUST READ