spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தல் – இரண்டு வாலிபர்கள் கைது

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தல் – இரண்டு வாலிபர்கள் கைது

-

- Advertisement -

ஆந்திரா மாநிலம் அனங்காபள்ளியிலிருந்து 22 கிலோ கஞ்சா கடத்திய தூத்துகுடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று அதிகாலை  திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் சோதனை சாவடி அருகில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் போலீசார்  வாகன சோதனை செய்த போது ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த பேருந்தை சோதனை செய்தனர்.

we-r-hiring

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தல் – இரண்டு வாலிபர்கள் கைது

சோதனையில் போதைப் பொருளான கஞ்சாவை கடத்தி வந்த  வேல்முருகன் (20),  தூத்துகுடி, சிரஞ்சீவி (24) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 22 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றி  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தல் – இரண்டு வாலிபர்கள் கைது

மேலும்  குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்து வரும் மற்ற நபர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

MUST READ